காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது

தமிழக காவல்துறையில் 2ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 3,644 காலிப்பணியிடங்களுக்கு 2.25 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.  45 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் முறைகேட்டைத் தடுக்க விண்ணப்பதாரரின் இடது கை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது.

Update: 2025-11-09 05:12 GMT

Linked news