வாக்கு திருட்டை மறைக்கவே எஸ்.ஐ.ஆர்: ராகுல் காந்தி
வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர் நடத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது: ``வாக்குத் திருட்டை மறைக்கத்தான் எஸ்ஐஆர்..சில நாள்களுக்கு முன்பாக, அரியாணா வாக்குத் திருட்டு குறித்து ஒரு விளக்கக் காட்சியை நான் அளித்தேன். சுமார் 25 லட்சம் வாக்குகள்; அதாவது எட்டில் ஒன்று திருடப்பட்டதாகத் தரவு தெளிவாகக் காட்டுகிறது.இந்தத் தரவுகளை ஆராய்ந்த பிறகுதான், மத்திய பிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கரிலும் இதேபோல் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக நினைக்கிறேன்.
இது, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.எங்களிடம் நிறைய விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரையில் நாங்கள் காட்டியது ஒரு சிறிய பகுதி மட்டுமே.வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் தொடரும். தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.