பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் நிசங்கா, ஹசரங்கா, குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம்:
அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, லஹிரு உதாரா, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்கே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, துஷ்மந்த சமீரா, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், ஏஷன் மலிங்கா
Update: 2025-11-09 09:58 GMT