உத்தரகாண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மிக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025
உத்தரகாண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மிக பலம்தான் - பிரதமர் மோடி
உத்தரகாண்ட் மாநில பட்ஜெட் 25 ஆண்டுக்கு முன் ரூ.4,000 கோடியாக இருந்தது, இப்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடைந்துள்ளது. உத்தரகாண்டின் உண்மையான சக்தி அதன் ஆன்மிக பலம்.உலகின் ஆன்மிக தலைநகராக மாற முடியும்.
உத்தரகாண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரட்டை இன்ஜின் பாஜ அரசு பாடுபடுகிறது. மாநில இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நான் கலந்துரையாடினேன். மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அனைவரும் உற்சாகமாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு, 6 மாத காலத்திற்குள் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகாண்டிற்கு வருகை தந்தனர்.