ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். விமான நிலையம் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை நந்தம்பாக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிறகு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர் நாளை மறுதினம் திருவாரூர் சென்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்கிறார். பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்து திருச்சியில் இருந்து டெல்லி திரும்ப உள்ளார்.
Update: 2025-09-01 05:07 GMT