டாஸ்மாக் குடோன் முன்பு ஊழியர்கள் கண்டன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025

டாஸ்மாக் குடோன் முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 80 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. குப்பைகளை தடுக்க மற்றும் மறுசுழற்சியை எளிதாக்க மதுபாட்டில் வாங்கும் போது கூடுதலாக ரூ.10 செலுத்தி பின்னர் காலி பாட்டிலைக் கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்பப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இந்த நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஓரிக்கை டாஸ்மாக் குடோன் முன்பு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2025-09-01 06:27 GMT

Linked news