கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி ரூபாய் வழங்கியது வீணாகவில்லை - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி ரூபாய் வழங்கியது வீணாகவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Update: 2025-09-01 11:26 GMT