உங்களுடன் பேச வேண்டும்... 10 நிமிடம் காத்திருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025

உங்களுடன் பேச வேண்டும்... 10 நிமிடம் காத்திருந்து பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

புதின் தன்னுடைய ஆடம்பர மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட லிமோசின் ரக காரில் வரும்படி கூறி பிரதமர் மோடியை அழைத்து சென்றார். இருவரும் காரில் ரிட்ஜ்-கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றனர்.

அதற்கு முன், பிரதமர் மோடி வருவதற்காக 10 நிமிடங்கள் வரை புதின் காத்திருந்தபடியே காணப்பட்டார். அவர் வந்ததும் இருவரும் ஒரே காரில் ஒன்றாக சென்றனர். அப்போது பல்வேறு விசயங்களை பற்றி அவர்கள் உரையாடினர். கார் ஓட்டலை அடைந்த பின்னரும், அவர்கள் இருவரும் 45 நிமிடங்கள் காரில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். அது ஆழ்ந்த அறிவு சார்ந்த ஒன்றாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2025-09-01 11:36 GMT

Linked news