பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என நேற்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அர்ச்சகர் தட்டு காணிக்கை விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, முதலில் அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்படவில்லை. பிறகு பணி வரன்முறை செய்யப்பட்டது.
பக்தர்களிடம் இருந்து வரக்கூடிய காணிக்கையை உண்டியலில் போடும் சூழல் இருந்தது. அதில் ஏற்பட்ட சிறு சிக்கல் காரணமாக தக்கார் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கை தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. சிக்கலும் முடிவுக்கு வந்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-02-10 06:14 GMT