சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்: பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உறுதி 


சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம்.அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும். இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2025-12-10 07:47 GMT

Linked news