வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்தல் கமிஷன்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் கணக்கீட்டு காலம் நாளையுடன் நிறைவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியலானது சிறப்புத் தீவிர திருத்தப்பணி கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான வருகிற 16-ந்தேதி அன்று வெளியிடப்படுகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூ ட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Update: 2025-12-10 13:54 GMT

Linked news