பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்: ஜெலன்ஸ்கி பேச்சு
உக்ரைன் நாட்டுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, உக்ரைனின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பியதுடன், உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல், போரை மன்னிப்புக்கான ஒன்றாக பயன்படுத்தி கொள்கிறார் என கூறினார்.
Update: 2025-12-10 14:28 GMT