தமிழக சட்டசபையில் உரையாற்றி வருகிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
தமிழக சட்டசபையில் உரையாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசும்போது, கவர்னர் திட்டமிட்டு விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார். கவர்னர் செயலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அவையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசி வருகிறார். அவர் பேசும்போது, வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்கும். மகளிருக்கான கட்டணமில்லா பஸ்சை ஸ்டாலின் பஸ் என்றே பெயர் வைத்து விட்டனர். நான் செல்ல கூடிய இடங்களில் மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி என்றும் கூறியுள்ளார்.
Update: 2025-01-11 04:40 GMT