திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு வழி ரெயில் பாதையில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னாள் ஊழியர் ஒருவர் பார்த்து ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
ரெயில் சென்றால் விபத்து ஏற்படும் என்ற சூழலில், எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.
Update: 2025-02-11 04:49 GMT