குஜராத்தில் யோகா பயிற்சி முகாம் சர்வதேச யோகா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
குஜராத்தில் யோகா பயிற்சி முகாம்
சர்வதேச யோகா தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யோகா நிகழ்வுகளில் பங்கேற்போர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் ஏராளமானோர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மாநில மந்திரிகளும் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
Update: 2025-06-11 05:07 GMT