லாலு பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
லாலு பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத் அவர்கள். மண்டல் ஆணையப் பரிந்துரைகளை உறுதியாக நடைமுறைப்படுத்தியும், மதவாத சக்திகளுக்கு எதிரான வலுவான அரணாக இருந்தும் சமூகநீதிக் கருத்தாடலில் தேசிய அளவில் புதுப்பாதை வகுத்தவர் அவர். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Update: 2025-06-11 05:28 GMT