ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் பதிவு செய்ய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025

ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் - ரெயில்வே அமைச்சகம்

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய இனி ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

இந்த புதிய விதி ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தட்கல் சேவையின் பயன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

Update: 2025-06-11 10:19 GMT

Linked news