சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
சாதி, மதமில்லை என சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரை செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.
Update: 2025-06-11 12:20 GMT