விருதுநகர் அருகே கோவிலுக்குள் 2 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
விருதுநகர் அருகே கோவிலுக்குள் 2 பேர் வெட்டிக்கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
Update: 2025-11-11 06:03 GMT