டெல்லி கார் வெடிப்பு - உயிரிழப்பு 12 ஆக உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கார் வெடித்து காயமடைந்தவர்கள் டெல்லி எல்.என்.ஜெ.பி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூத்த உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்கிறார்.
Update: 2025-11-11 06:15 GMT