பீகார் சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

பீகார் சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குப்பதிவு

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறு விறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2025-11-11 08:16 GMT

Linked news