பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டுவெடிப்பு;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டுவெடிப்பு; 12 பேர் பலி
குண்டுவெடிப்பு தொடர்பான உயிரிழப்புகளை, பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மருத்துவமனை மையம் செய்தியாளர்களிடம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. முழுவதும் உயரதிகாரிகளுக்கான அரசு அலுவலகங்கள் அமைந்த, பரபரப்பான இந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம், உயர்மட்ட அளவிலான பாதுகாப்பின்மையையே எடுத்து காட்டுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எந்தவோர் அமைப்பும் இதற்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. எனினும், ஆப்கான் தலீபான் மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தி உள்ளனர் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு வட்டாரங்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
Update: 2025-11-11 11:57 GMT