அல்லரி நரேஷ்-காமக்சி நடித்த திகில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

அல்லரி நரேஷ்-காமக்சி நடித்த திகில் படம்...டிரெய்லர் வெளியானது

நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் பெற்ற நடிகர் அல்லரி நரேஷ் நடித்த திகில் படம் 12எ(12A) ரெயில்வே காலனி. இந்தப் படத்தை நானி காசர்கட்டா இயக்கி அறிமுகமாகிறார்.

இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா, மதுமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த 12எ(12A) ரெயில்வே காலனி படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2025-11-11 12:51 GMT

Linked news