பீகார் சட்டசபை தேர்தல்; வெற்றி பெறுவது யார்?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
பீகார் சட்டசபை தேர்தல்; வெற்றி பெறுவது யார்? கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
2-வது கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் உள்பட இறுதி வாக்கு பதிவு நிலவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வெற்றி பெறும் கட்சிகளின் நிலவரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். எனினும், 14-ந்தேதி வெளிவரும் முடிவே இறுதியானது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.
Update: 2025-11-11 13:22 GMT