பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு; சராசரி 66.80 சதவீதம்
தொடர்ந்து 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பீகாரில் 6 மணியளவில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த சூழலில், பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் சராசரியாக 66.80 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்காளர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு என்ற பரபரப்புக்கு இடையே அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, வாக்குப்பதிவு சற்று அதிகம் என கூறப்படுகிறது.
Update: 2025-11-11 14:36 GMT