சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது.
இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.535-ம், சவரனுக்கு ரூ.4,280-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
Update: 2025-02-12 04:59 GMT