சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, 3 சுங்கத்துறை அதிகாரிகளை கைது செய்தனர்.
டெல்லியை சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதியாளர்களும் கைது செய்யப்பட்டனர். மைசூர் பருப்பு எனக்கூறி ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
Update: 2025-02-12 06:18 GMT