அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த உத்தரவு பற்றி பேட்டியளித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்" என கூறியுள்ளார்.
Update: 2025-02-12 08:17 GMT