கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் செய்தியாளர்களிடம் கூறும்போது, அனைத்து தளங்களில் இருந்தும் வந்த தாக்குதல்களை முறியடித்து உள்ளோம். கடற்படை கண்காணிப்பு தொடர்கிறது. ஆபத்து ஏதேனும் வருகிறது என்றால் உடனடியாக கண்டுபிடித்து முறியடிக்கப்படும்.

வணிக, போர் விமானங்களை அடையாளம் காணும் உயர் தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது என கூறியுள்ளார். முப்படைகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தது. அதனால், எதிரி விமானங்களால் நம்மை நெருங்க கூட முடியவில்லை. எதிரியை பல 100 கி.மீ. தொலைவிலேயே நிறுத்தி விட்டோம் என பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2025-05-12 10:31 GMT

Linked news