காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு, நாட்கள் சென்ற நிலையில் முதன்முறையாக, பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அவர் என்ன உரையாற்ற போகிறார் என்ற ஆவல் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Update: 2025-05-12 14:22 GMT