மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - போக்குவரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - போக்குவரத்து மாற்றம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல் வழியாக செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-01-13 03:47 GMT