சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் சீரமைப்பு நீளம் சுமார் 20 கி.மீ. ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி வரை கட்டுமானச் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-01-13 05:54 GMT