குரோஷியா ஜனாதிபதியாக ஜோரன் மிலனோவிக் மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
குரோஷியா ஜனாதிபதியாக ஜோரன் மிலனோவிக் மீண்டும் தேர்வாகிறார்: கருத்துக் கணிப்பு
குரோஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோரன் மிலனோவிக் வெற்றி பெறுவார் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜோரன் மிலனோவிக் 78 சதவீத வாக்குகளும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் டராகன் பிரைமோரக் 22 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என இப்சோஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-01-13 10:59 GMT