மெட்ரோ பாலம் விபத்து - போக்குவரத்தில் மாற்றமில்லை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

மெட்ரோ பாலம் விபத்து - போக்குவரத்தில் மாற்றமில்லை - காவல்துறை அறிவிப்பு

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (42) என்பவர் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சாலையை சரி செய்யும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் போரூரில் இருந்து சென்னை சின்னமலை வரும் சாலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விபத்து நடந்த சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், கனரக வாகனங்களுக்கு மட்டும் 2 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த சாலையில் 11 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-06-13 03:49 GMT

Linked news