விமான விபத்தில் சதித் திட்டத்திற்கான முகாந்திரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
விமான விபத்தில் சதித் திட்டத்திற்கான முகாந்திரம் இல்லை - மத்திய அரசு தரப்பு
ஆகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த விமான விபத்தில் சதித் திட்டத்திற்கான முகாந்திரம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகமதாபாத் போலீசாரின் விசாரணைக்கு உதவ என்.ஐ.ஏ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முகாமிட்டுள்ளது என்றும், புறப்பட்ட 30 நொடிகளில் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என்றும் மத்திய அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-06-13 05:41 GMT