எட்டயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
எட்டயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரியின் பின்பக்கம் கார் மோதிய விபத்தில் சிக்கி காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் பயணம் செய்த தஞ்சை மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி நீதிபதியின் பாதுகாவலர் மற்றும் அவரது உறவினர் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2025-06-13 06:03 GMT