டாஸ்மாக் விவகாரம் - அமலாக்கத்துறைக்கு சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
டாஸ்மாக் விவகாரம் - அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இதனை எதிர்த்து, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை? விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
Update: 2025-06-13 07:51 GMT