மேகதாது அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

மேகதாது அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தில் பின்னடைவாக கருத இயலாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கர்நாடக அரசு கடந்த 15 ஆண்டுகளாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் 67.16 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும்போது, காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவு வெகுவாக குறையும், அதன் காரணமாக காவிரி பாசனப் பகுதிகளும், தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் சட்டப் போராட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Update: 2025-11-13 13:02 GMT

Linked news