கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்.ஐ.ஆர்.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்கள் வழங்கல்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக குறள் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து திரும்ப பெறுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு பதிவு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அழகுமீனா காணொலி காட்சி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டபோது கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 4.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்புப் படிவத்தினை வழங்கி வருகிறார்கள்.