உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும்.
உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவின் 2-ம் நாளான இன்றும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள், மக்களோடு மக்களாக சேர்ந்து கும்பமேளாவில் பங்கேற்றும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இதேபோன்று துறவிகளுடன் சேர்ந்து வெளிநாட்டு பக்தர்கள் சாமி பாடல்களை பாடி, புனித நீராடி வருகின்றனர்.
Update: 2025-01-14 04:58 GMT