இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பொதுமக்கள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 320 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய படைத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களில் ஈரான் நடத்திய தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தநிலையில், 50 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-14 03:39 GMT