அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர் - உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியில் 85 அடி வரை நீர் நிரம்பி உள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Update: 2025-06-14 03:45 GMT