19ம் தேதி விண்வெளி ஆய்வு மையம் செல்கிறார் சுபான்ஷு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
19ம் தேதி விண்வெளி ஆய்வு மையம் செல்கிறார் சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஹு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவை ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான சமீபத்திய செய்திக்குறிப்பில், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடனான சந்திப்பின் போது, பால்கன் 9 ஏவுதளத்தில் உள்ள சிக்கல் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளதாக குழுக்கள் தெளிவுபடுத்தியதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது.
Update: 2025-06-14 07:04 GMT