ஈரோடு: மேம்பாலம் அடியில் தூங்கிக் கொண்டிருந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
ஈரோடு: மேம்பாலம் அடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்
ஈரோடு மாவட்டம் சித்தோடு மேம்பாலம் அடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
கொசுவலையை அறுத்து குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தோடு காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Update: 2025-10-16 07:08 GMT