பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் நிதிஷ்குமாரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த கட்சி 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் எஞ்சிய 44 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் இன்று அறிவித்தது.

ஷீலா மண்டல், விஜேந்திர பிரசாத் யாதவ், லேஷி சிங், ஜெயந்த்ராஜ், முகமது ஜமாகான் உள்ளிட்ட மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். அந்த கூட்டணியில் பா.ஜனதா ஏற்கனவே போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான (101) வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. தற்போது ஐக்கிய ஜனதா தளமும் 101 ெதாகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

Update: 2025-10-16 12:07 GMT

Linked news