விவசாயிகளுக்கு அசத்தல் அறிவிப்பு... சம்பா பயிர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025

விவசாயிகளுக்கு அசத்தல் அறிவிப்பு... சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


Update: 2025-11-16 08:10 GMT

Linked news