ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட இதுவரை 53 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஏமனில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் கூறியுள்ளார். ஏழ்மையான அரபு நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஏமனில், இந்த தாக்குதலால் மக்கள் சமூகத்திற்கு பேராபத்து ஏற்படும் சூழல் உள்ளது என எச்சரித்து உள்ளார்.
Update: 2025-03-17 04:43 GMT