அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன் இன்று அவையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன் இன்று அவையில் பேசும்போது, ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரையில் நான்கு வழிச்சாலை விரிவுப்படுத்தப்பட்டன. கோபி நகரத்திற்குள் நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தின் அடிப்படையில் எங்களது ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. உறுப்பினரும் கோரிக்கை வைத்திருக்கிறார். இதுதொடர்பாக மானிய கோரிக்கையின்போது அவருக்கு பிடித்த மாதிரி பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

Update: 2025-03-17 05:31 GMT

Linked news