ஆமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025
ஆமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த ஆய்வின்போது, தொழில் நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்தே, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Update: 2025-06-17 10:52 GMT