தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்
ஈரோட்டிற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு யார் முதலில் மாலை போடுவது என்பதில் தர்மபுரி - ஈரோடு மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை போட வந்த நிர்வாகியை மற்றொரு நிர்வாகி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்.ஆனந்த் உடனே இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-12-17 04:18 GMT